மத்திய பிரதேசம் : சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.!
Madhya Pradesh goods train accident
மத்தியபிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதிகள் எரிவாயு ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் ஷாபுரா பிடோனியில் உள்ள பாரத் பெட்ரோலிய கிடங்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ரயில் சேவையிலும் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Madhya Pradesh goods train accident