காதல் திருமணமா? பெற்றோர் சம்மதம் இல்லாமல்...! No...!பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


பஞசாப் மாநிலம் சண்டிகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் மனக்பூர் ஷெரீப் என்ற கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி முறை தவறி திருமணம் செய்து கொண்டதாக அந்த மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி பெரிய பூகம்பமே வெடித்தது.

இதைத் தொடர்ந்து,இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய தடை விதித்து கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வகையில்,பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யும் ஜோடி அந்த கிராமத்திலோ அல்லது அருகிலுள்ள பகுதிகளிலோ வாழ முடியாது.

மேலும், அவர்களுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்து பார்த்தொண்டால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தல்வீர் சிங்:

இதுதொடர்பாக கிராம தலைவர் 'தல்வீர் சிங்' தெரிவிக்கையில்,"இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும். நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் கிராமத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது " என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிராம கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மான உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  பல விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Love marriage Without parental consent No PUNJAB state


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->