இந்த மாவட்டத்திற்கு மட்டும் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்கள் ஊடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் 19ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் பாரதிதாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில தலைநகர் ராய்ப்பூர் முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏப்ரல் 6ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை பல செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. 

கொரோனாபாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மதுபான கடைகள், சுற்றுலா, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை மூடியிருக்கும். அதேநேரம் மருந்தகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ரயில் மற்றும் விமான நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும். மாவட்ட எல்லை அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lock down in chhattisgarh raipur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal