அடக்கடவுளே! விளையாட்டாக எடுத்த மூடி... உயிரை காவு வாங்கியது...! - அம்மா கண்முன்னே நிகழ்ந்த துயரம் - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுகந்தர், மவுனிகா தம்பதியினர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயது மகனான 'ரக்ஷித்ராம்' இருந்தான்.இந்நிலையில்,மவுனிகா இரவு நேர பணி செய்து வந்ததால், சிறுவனையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது.

அதன்படி, நேற்று முன்தினமும் மகனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கு தாய் பணியில் மூழ்கியிருந்த வேளையில், விளையாடிக் கொண்டிருந்த ரக்ஷித்ராம் அருகே கிடந்த தண்ணீர் பாட்டிலின் மூடியை எடுத்துப் விளையாட்டுத்தனமாக வாயில் போட்டான்.

அப்போது துரதிஷ்டவசமாக அடுத்து சில நொடிகளில் அந்த மூடி தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி அலறினான். இதைக் கண்ட மவுனிகாவும், அங்கிருந்த பணியாளர்களும் பீதி அடைந்து சிறுவனை விரைவாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர்களின் முயற்சி பலிக்காமல், குட்டி ரக்ஷித்ராம் அநியாயமாக உயிரிழந்தான்.அங்கு மகன் உயிரிழந்த காட்சியை கண்டு தாய் கதறி விழுந்து அழுதார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், “சிறுவர்கள் இருக்கும் இடங்களில் பாட்டில் மூடி, பிளாஸ்டிக் பைகள், நாணயம் போன்ற சிறிய பொருட்களை வைக்க வேண்டாம். இவை உடனடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்,” என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lid I took joke took my life tragedy that happened before my mothers eyes


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->