கேரளா : கட்டிய மனைவியை நண்பர்களை விட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கணவன்.! கேரளாவை அதிரவைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கட்டிய மனைவியை கணவனே, தன் நண்பர்களுக்கு விருந்தாக்கி அதனை வீடியோவாக எடுத்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ள கருகச்சால் பகுதியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் ஒருவர், கடந்த வாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரினை இந்த சம்பவம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த ஆறு பேரிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்வரும் செய்தி சொல்லப்படுகிறது,

"குடும்ப விழா ஒன்றுக்கு அழைத்துச் செல்வதாக அந்த இளம்பெண்ணை அவர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தன்னுடைய உள்நோக்கத்தை அதாவது நண்பர்களுக்கும் அவர் விருந்து படைக்க வேண்டும் என்பதை மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அங்கு செல்ல மறுத்துள்ளார். அப்போது நீ செல்லவில்லை என்றால் நான் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அவரின் மிரட்டலுக்கு பணிந்து கணவனின் நண்பர்கள் உள்ளிட்ட பல ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் அந்த இளம்பெண்.

இதனை வீடியோ எடுத்துக் கொண்ட அந்த கணவன், அந்த வீடியோவை காண்பித்து கடந்த இரண்டு வருடங்களாக அந்த இளம்பெண்ணை மிரட்டி பலருக்கு அவரை விருந்தாக்கி உள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் இவர்கள் ஒரு வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கி அதன் மூலம் 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் கணவன்கள் இதே வேலையை செய்து வந்துள்ளதும் தற்போது போலீசாரின் விசாரணையில் வெளியாகியுள்ளது.

இந்த இளம்பெண் போன்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க மேற்கொண்டு வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala young woman abused many mans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->