நள்ளிரவில் கொட்டி பேய் மழை! அணை திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!!
Kerala rivers flood due to dam opening in midnight
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக மூழியாறு அணை ஒட்டிய நீர்ப்பிடிப்பு வனப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தது.

கன மழை நீடித்ததால் மூழியாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்ததை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 3 ஷெட்டர்கள் நள்ளிரவில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கவி மற்றும் பம்பை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு பாதுகாப்பாக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்த பின்பு ஷட்டர்கள் மூடப்படும் என கேரள மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Kerala rivers flood due to dam opening in midnight