அடேங்கப்பா.. பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டின் அறையில் 10 வருடம் குடித்தனம் நடத்திய காதல் ஜோடி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியை சார்ந்த பெண்ணொருவர், கடந்த 16 வருடங்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார். இந்நிலையில், தற்போது அவரது வீட்டில் இருந்து 500 மீ தொலைவில் அமைந்துள்ள வீட்டில் காதலனுடன் வசித்து வருவது தெரியவந்துள்ளது. 

மேலும், காதலனின் வீட்டில் பெண் இருக்கிறார் என்பது கூட தெரியாமல் 16 வருடம் ரகசியம் காக்கப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் வருடத்தில் பாலக்காட்டில் உள்ள அயலூர் கிராமத்தை சார்ந்த பெண்மணி மாயமாகி இருக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், காவல் துறையினர் வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், தங்களின் மகள் என்ன ஆனால்? என்பது கூட தெரியாமல் பெற்றோர்கள் பரிதவித்து வந்துள்ளனர்.

பெண்மணி கடந்த 2010 ஆம் வருடம் முதல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை காதலனின் வீட்டில் இருக்கும் அறையில் தங்கி இருந்துள்ளார். அறையில் தங்கியிருந்தவாறு அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், காதலனும் - பெண்ணும் பக்கத்து ஊரில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வருவதை காதலனின் சகோதரர் எதற்ச்சையாக கண்டுள்ளார். 

இதனையடுத்து, சகோதரரிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 10 வருடமாக காதலியுடன் நடத்தி வந்த ரகசிய வாழ்க்கை அம்பலமானது. மேலும், இருவரும் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள் என்பதால், வீட்டிற்கு தெரிந்தால் இருதரப்பும் எதிர்ப்பு தெரிவித்து காதலை பிரிந்துவிடுவார்கள் என்று எண்ணி காதலை மறைத்து வைத்துள்ளது. 

சம்பந்தப்பட்ட ஜோடிகளின் விவகாரம் காவல் துறையினருக்கு தெரியவரவே, காவல் அதிகாரிகள் ஜோடியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நீதிமன்றம் விசாரித்து இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வாழ அனுமதி வழங்கியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Love Couple Discovered after 10 years in Same Village


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal