மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த மருமகன்! காரணமாக அமைந்த வயது வித்தியாசம்...!
karnataka woman murder case
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியில் ஆகஸ்ட் 7 அன்று காலையில் தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் கவரில் மனிதக் கை ஒன்றை எடுத்து அலைந்தது போலீசாருக்கு தகவலாகி, சம்பவ இடத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. ரத்தம் வடிந்திருந்ததால் கொலைச் சந்தேகம் எழுந்தது.
சுற்றுவட்டார தேடுதலில் 5 கிலோமீட்டர் தூரத்தில் 19 இடங்களில் துண்டிக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. ஆனால் தலை காணப்படவில்லை. பின்னர் தடயவியல் பரிசோதனையில் உடல் பாகங்கள் 42 வயதான லட்சுமி தேவிக்குரியது என உறுதி செய்யப்பட்டது. இவர் ஆகஸ்ட் 3 அன்று மாயமானவர்.
கணவர் பசவராஜிடம் விசாரணையில், மனைவி மகள் தேஜஸ்வியின் வீட்டிற்கு சென்றபோது காணாமல் போனதாக கூறினார். பின்னர் தேடுதலில் கொரட்டகெரேவில் பெண்ணின் தலை கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மூலம் வெள்ளை நிற கார் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் சதீஷ் என்பவருக்கு சொந்தமானது. அவரும் கூட்டாளி கிரணும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் லட்சுமி தேவியின் மருமகன், பல் டாக்டர் ராமசந்திரய்யா தான் கொலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.
ராமசந்திரய்யா, லட்சுமி தேவியின் 20 வயது மகள் தேஜஸ்வியை திருமணம் செய்திருந்தார். வயது வித்தியாசத்தை வைத்து மாமியார் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இதனால், ரூ.4 லட்சம் கொடுப்பதாகச் சொல்லி சதீஷ், கிரண் ஆகியோருக்கு கொலை செய்ய ஒப்பந்தம் செய்தார்.
ஆகஸ்ட் 3 அன்று லட்சுமி தேவியை காரில் ஏற்றி, கழுத்தை நெரித்து கொன்று, சதீஷின் தோட்டத்தில் உடலை துண்டு, துண்டாக வெட்டி 19 இடங்களில் வீசியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது போலீசார் மூவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
karnataka woman murder case