டி.சி.பி மீது லாரி ஏற்றி கொலை முயற்சி.. மணல் திருட்டு சமூக விரோதிகள் அட்டகாசம்.. அப்துல், மொய்தீன் கைது.! - Seithipunal
Seithipunal


திருட்டு மணல் லோடை ஏற்றிச்சென்ற லாரி, அதிகாரிகளின் வாகனம் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் நேத்ராவதி ஆற்றில் கனரக லாரிகளில் மணல் கடத்துவது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதனையடுத்து, மங்களூர் காவல் துணை ஆணையர் ஹரிராம் சங்கர் தலைமையிலான அதிகாரிகள், மணல் திருட்டை ஒழிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் சோதனை சாவடிகள் அமைப்பட்டு, லாரிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மங்களூர் அருகேயுள்ள பந்த்வால் கிராமம் அருகேயுள்ள பகுதியில் டாரஸ் லாரியில் மணல் திருடப்பட்டுள்ளது. 

இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவரவே, பந்த்வால் காவல் துறையினர் சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, லாரி அவ்வழியாக வரவே, காவல் துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளனர். 

அதிகாரிகள் கூடுவதை புறக்கணித்த லாரி ஓட்டுநர், சோதனை சாவடியை இடித்து தள்ளிவிட்டு, காவல் துணை ஆணையரை கொலை செய்வது போல வாகனத்தை இயக்கி தப்பி சென்றது. மேலும், லாரிக்கு உதவியாக பின்னால் காரில் வந்தவரும், அதிகாரிகள் மீது மோதுவது போல பாவித்து தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அதிகாரிகள் டிப்பர் லாரியை விரட்டி பிடித்துள்ளனர். லாரியில் இருந்த ஓட்டுநர் அப்துல் இசாக் மற்றும் கிளீனர் என்ற கார் ஓட்டுநர் மொய்தீன் அப்சரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Mangalore DCP Hariram Shankar Murder Attempt by Sand Smuggling Lorry 2 Arrested


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal