உயிருக்கு உயிராக நடந்த காதலில் திருப்பம்.. குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கிய ஜோடி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பங்காருபேட்டை கிராமத்தில் குளம் உள்ளது. இந்த நிலையில், நேற்று அக்குளத்தில் வாலிபர் மற்றும் இளம்பெண்ணின் பிணம் மிதந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், பங்காருபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய துவங்கினர். இந்த விசாரணையில், பிணமாக இருந்தவர்கள் அங்குள்ள மாட மங்களா பகுதியை சார்ந்த சுரேஷ் (வயது 28), காரஹள்ளி பகுதியை சார்ந்த ரூபா (வயது 26) என்பதும் தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ரூபாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக மற்றொரு வாலிபருக்கு ரூபாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் கணவருடன் வாழ இயலாமல் விரக்தியில் தவித்து வந்த ரூபா மனவேதனையில் இருந்துள்ளார். 

தனது காதலி மற்றொரு நபருக்கு மனைவியான செய்தியை அறிந்த சுரேஷும் மிகுந்த மனவேதனையில் இருந்த நிலையில், காதல் ஜோடிகள் விபரீத முடிவெடுத்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Kolar Couple Suicide due to Parents Resistance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal