கேவலமான அரசியலை கையில் எடுத்த கர்நாடக பாஜக.. குமாரசாமி உச்சகட்ட வருத்தம்.! - Seithipunal
Seithipunal


தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்வது சரியானது கிடையாது. வளர்ச்சி குறித்து விவாதிக்கலாம், விமர்சனம் செய்யலாம் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சிந்தகி தொகுதியில், ஜனதா தளம் எஸ் வேட்பாளரை ஆதரித்து இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், "எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பாஜக விமர்சனம் செய்கிறது. அரசியல், தனிப்பட்ட வாழ்கை திறந்த புத்தகம் போன்றது. நான் எதனையும் மூடி மறைக்கவில்லை. பாஜக தலைவர் நாளின் குமார் காட்டீலை பற்றி எதுவும்தெரிவிக்க முடியுமா?. அவரால் அநீதியை சந்தித்தவர்கள் குறித்து நான் பேசலாம். என்னை கிளற வேண்டாம். 

எனது 2 மனைவிகள் குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். இரண்டாவது திருமணம் செய்து வாழ்க்கையில் தவறு செய்துவிட்டேன். அதனை நான் திருத்திக்கொண்டேன். இதனை சட்டப்பேரவையில் நான் தெரிவித்தேன். எனது தகவலை பகிரங்கப்படுத்துகிறேன் பசனகவுடா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தெரிந்த ரகசிய தகவல் இருந்தால் வெளிப்படுத்தட்டும். எனக்கு பிரச்சனை இல்லை. ஏனெனில் நான் தவறுகள் ஏதும் திரைமறைவில் செய்யவில்லை.

தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்வது சரியானது கிடையாது. அனைவரின் வாழ்க்கையிலும் பல ரகசியம் உள்ளது. இதனை பேச ஆரம்பித்தால் அவர்களை விட 10 மடங்கு தகவலை வெளியிடலாம். வளர்ச்சி விஷயங்கள் குறித்து விவாதம் செய்யலாம், விமர்சனம் எழுப்பலாம். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம். ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் குடும்பத்தில் நடந்தது அனைவருக்கும் தெரியும். 

பாஜகவினரின் பல விஷயத்தை ஒவ்வொன்றாக கூறினால், அவர்களின் நிலை என்னாகும்?. எங்களது வளர்ச்சியை பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனது வாழ்க்கையில் பல மோசமான நிகழ்வு நடந்துள்ளது. இதனை யாரிடமும் நான் மூடி மறைக்கவில்லையே. திசை மாறி சென்றாலும், சரியான பாதைக்கு திரும்பியுள்ளேன். என்னால் சமூகத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா?.

பாஜக தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாறு உள்ளது. அவர்கள் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். நான் யாருடனும் சமரசம் செய்யவில்லை. பாஜகவுக்கு எதிராக போராடி வருகிறேன். தனிப்பட்ட விஷயங்கள் கிளறப்படுவதால் யாருக்கு பலன்?. நீங்கள் சேற்றை வாரி இறைப்பது போல நானும் பேசலாம். எங்களுக்கு அது தேவையில்லை. தலைவர்கள் பொறுப்பை அறிந்து பேசினால் நல்லது" என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Former CM Kumarasamy Pressmeet about BJP Foolish Politics Move


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->