கல்லூரியின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சார்ந்தவர் ஜெயந்த் ரெட்டி (வயது 22). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் தனியார் கல்லூரியில், இரண்டாம் வருடம் பொறியியல் பட்டம் பயின்று வந்துள்ளார். பெங்களூர் - ஓசூர் சாலையில் உள்ள பொம்மசந்திரா பகுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்த நிலையில், நேற்று வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுள்ளார். 

காலை 9.30 மணியளவில் கல்லூரியின் 7 ஆவது மாடிக்கு சென்ற ஜெயந்த் ரெட்டி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த ஜெயந்த் ரெட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவலை அறிந்ததும் சமப்வ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஜெயந்த் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தொடங்கினர். 

இந்த விசாரணையில், ஜெயந்த் ரெட்டி தனது சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். இந்த கடிதத்தில், " தினமும் இறப்பதை விட, ஒரேநாளில் உயிரை மாய்துகொள்ளலாம் " என்று எழுதியுள்ளார். மேலும், கல்லூரி தொடங்கிய 42 வருடத்தில், முதல் மாணவர் தற்கொலையாக இது இருக்கிறது என்று கூறிய கல்லூரியின் முதல்வர், ஜெயந்த் ரெட்டி திறமைசாலியான மாணவர் என்றும், டிப்ளோமாவில் 94 விழுக்காடு மதிப்பெண் பெற்று எஞ்சினியரிங் படிக்க சேர்ந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore College Student Suicide on College Campus from Seventh Floor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->