நண்பன் அறிமுகம் செய்த தோழியை காதலித்த தோழன்.. அரங்கேறிய வெறித்தனம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பையப்பனஹள்ளி பகுதியை சார்ந்தவர் ரவிக்குமார் (வயது 26). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் லோகேஷ். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ரவிக்குமாருக்கு, இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில், ரவிக்குமார் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்மணியை ரவிக்குமார் லோகேஷுக்கு அறிமுகம் செய்துள்ளார். லோகேஷும் பெண்ணை காதலிக்க துவங்கிய நிலையில், தனது காதலை லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார். இந்த காதலுக்கு பெண்ணும் சம்மதம் தெரிவிக்க, லோகேஷும் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். 

இவர்களின் காதல் ரவிக்குமாருக்கு தெரியவரவே, இருவரும் காதலிக்க கூடாது என்றும், நான் தான் அவரை முதலில் காதலித்தேன் என்றும் பிரச்சனை செய்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனையடுத்து நண்பன் அறிமுகம் செய்து பின்னர் காதலியாக மாறிய பெண்ணை கைவிட முடியாத தருணத்தில் இருந்த லோகேஷ், சொந்த நண்பனான ரவிக்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதன்படி, கடந்த 20 ஆம் தேதி நண்பனை வீட்டில் இருந்து அழைத்து சென்று, அங்குள்ள ஏரி பகுதியில் தனது சக நண்பர்கள் சச்சின் மற்றும் ரஞ்சித் ஆகியோரின் உதவியுடன் கொலை செய்துள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் லோகேஷ், சச்சின், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Baiyappanahalli Love Problem youngster Murder By friend


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal