பனியில் வழியும் இரத்தம்! அண்டார்டிக்காவின் ‘ப்ளட் ஃபால்ஸ்’ மர்மம் வெளிச்சம்...!
Blood flowing ice mystery Antarctica Blood Falls revealed
Blood Falls – அண்டார்டிக்காவின் “இரத்த அருவி” மர்மம்
பெயரே அதிர்ச்சி… ப்ளட் ஃபால்ஸ்!
அண்டார்டிக்காவின் டெய்லர் பனிப்பாறையில் இருந்து பனி வெள்ளை உலகில் சிவப்பு நிற நீர் அருவியாக வழியும் அதிசய காட்சி.முதல் முறையாக இதைப் பார்த்த ஆய்வாளர்கள்,“இது பனிப்பாறையிலிருந்து இரத்தமா?” என்று பயந்தே போனார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?
இந்த சிவப்பு நிறத்திற்கு காரணம், உப்புச் சத்து மிகுந்த நீர்,இரும்புச் சத்து (Iron) அதிகம்,பனிக்குள் ஆயிரம் ஆண்டுகளாக அடைந்து கிடந்த நீர்.அந்த நீர் வெளியே வந்தவுடன்
காற்றுடன் சேர்ந்து, இரும்பு ஆக்சிடேஷன் ஆகி,இரத்தம் போல சிவப்பாக மாறுகிறது.இந்த நீர் மிகவும் குளிரானது, உப்புச் சத்து அதிகம், பனிக்குள்ளேயே உயிர்வாழும் நுண்ணுயிர்களும் இதில் இருக்கின்றன.அதனால் Blood Falls என்பது “பனிக்குள் மறைந்திருந்த காலத்தின் சாட்சி”என்றே விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
English Summary
Blood flowing ice mystery Antarctica Blood Falls revealed