இந்தியில் மட்டும் தான் பேசுவேன் - எஸ்.பி.ஐ மேலாளருக்கு சித்தராமையா கண்டனம்.!!
karnataga cm sidharamaiah condemns sbi manager speech
கர்நாடகா மாநிலத்தில் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் ஒருவர் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து இந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என்று வாடிக்கையாளர்களிடம் முறையிட்டுள்ளார். இதற்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும். மாநில மொழியில் பேச முயற்சி செய்ய வேண்டும்.
இந்தியில் பேசிய ஊழியரை பணி இடமாற்றம் செய்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையை பாராட்டுகிறேன். வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை மத்திய நிதியமைச்சகம் நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
karnataga cm sidharamaiah condemns sbi manager speech