மதுபானக்கடை ஊழியர் கொலை விவகாரம்.. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 இலட்சம் நிதிஉதவி.! - Seithipunal
Seithipunal


மர்ம நபர்கள் தாக்குதலில் உயிரிழந்த மதுபானக்கடை ஊழியர் துளசிதாசின் குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரக்கடம் அருகேயுள்ள மதுபானக்கடையில் பணியாற்றி வந்த ஊழியர் துளசிதாஸ் என்பவர் மர்ம நபர்களால் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, அன்றைய நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரக்கடம் அருகேயுள்ள மதுபானக்கடை ஊழியர் துளசி தாஸ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும், துளசிதாசை கொலை செய்த மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய, தமிழ்நாடு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மதுபானக்கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanchipuram Oragadam Tasmac Employee Thulasi Das Murder Issue TN Govt Announce Rs 10 Lakh Fund


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->