நியாயம் கேட்டு வந்த பெண்ணுக்கு அநியாயம் இழைத்த நீதிபதி...! கேரளாவில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கேரளா கொல்லம் மாவட்டத்தில் குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் ''உதயகுமார்''. இவர் அண்மையில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த ஒரு இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து  பாதிக்கப்பட்ட பெண் கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகாரளித்தார்.அந்த புகார் கேரளா உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த புகாரை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், குடும்ப நல நீதிபதியாக இருந்த உதயகுமாரை, கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி இதுகுறித்து உயர்நீதிமன்றம்  பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்து தற்போது உத்தரவிட்டனர்.இது தற்போது அம்மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

judge who did injustice woman who came seeking justice There stir Kerala


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->