அவர்கள் இல்லாமல் அடிக்கல் நாட்டு விழாவா? அய்யோதிக்கு அழைக்கப்பட்ட முக்கியமான நபர்கள்!  - Seithipunal
Seithipunal


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை வருகின்ற ஆகஸ்ட்  5-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

பூமி பூஜைக்கான சிறப்பு பூஜைகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு காரணமாக, அயோத்தி நகரம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் ஜொலித்து கொண்டிருக்கிறது.

உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் பணிகளைப் பார்வையிடச நாளை செல்கிறார். இதன்காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  கூட்டம் கூடினால் கொரோனா பரவிடும் என்பதால், பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதியான 4,000 போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக உத்திரபிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

1.25 லட்சம் விளக்குகள் பூமி பூஜை நடைபெறும் அன்று ஏற்றுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர்களாக கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்ற செய்தி முன்கூட்டியே வெளியானது. 

ஆனால் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என எதிர்ப்புகள் உண்டானது. இந்தநிலையில் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நிச்சயமாக விழாவில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Joshi and advani will come to rama mandir poomi pooja


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->