நெருப்பில் வெந்த காங்கோ சுவை...! சில்லி சாஸுடன் கவரும் ‘கிரில்ட் கோட்'...!
delicious taste flame grilled Congo meat tempting Grilled Goat chili sauce
கிரில்ட் கோட் (Chèvre Rôtie) என்பது காங்கோ நாட்டின் மிகவும் பிரபலமான தெரு உணவுகளில் ஒன்றாகும். ஆட்டிறைச்சியை (Goat Meat) பல்வேறு மசாலாக்களில் ஊறவைத்து, கரி நெருப்பில் மெதுவாக வாட்டி தயாரிக்கும் இந்த உணவு, புகை மணமும் கார சுவையும் கலந்து உணவுப்பிரியர்களை கவரும். இது பெரும்பாலும் காரம் நிறைந்த சில்லி சாஸ், வெங்காயம் மற்றும் எலுமிச்சையுடன் பரிமாறப்படுகிறது.
தேவையான பொருட்கள் (Ingredients)
ஆட்டிறைச்சி – 1 கிலோ (எலும்புடன் அல்லது இல்லாமல்)
பூண்டு – 6 பல் (அரைத்தது)
இஞ்சி – 1 துண்டு (அரைத்தது)
வெங்காயம் – 1 (அரைத்தது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கருமிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு / வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸுக்காக:
உலர் சிவப்பு மிளகாய் – 6
பூண்டு – 3 பல்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு – சிறிதளவு

தயாரிக்கும் முறை (Preparation Method)
ஆட்டிறைச்சியை நன்கு கழுவி, நடுத்தர அளவிலான துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய் தூள், கருமிளகு, சீரகம், உப்பு, எலுமிச்சை சாறு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து மசாலா தயார் செய்யவும்.
இந்த மசாலாவை ஆட்டிறைச்சியில் நன்றாக தடவி, குறைந்தது 4–6 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) ஊறவிடவும்.
கரி நெருப்பை தயாரித்து, கிரில் கம்பிகளில் ஆட்டிறைச்சி துண்டுகளை சொருகவும்.மிதமான தீயில் அவ்வப்போது திருப்பி விட்டு, சாறு தடவியபடி நன்றாக வேகவிடவும்.
வெளிப்புறம் கரகரப்பாகவும், உள்ளே மென்மையாகவும் வெந்ததும் கிரில்ட் கோட் தயார்.
சில்லி சாஸ்:
உலர் மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை அரைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
English Summary
delicious taste flame grilled Congo meat tempting Grilled Goat chili sauce