ஒரு கடி… ஒரு சிரிப்பு...! காங்கோவின் காலை நேர ஸ்வீட் ஹிட் ‘மிகாத்தே’...!
One bite one smile Congo morning sweet hit Mikate
பென்யே (Beignets) அல்லது மிகாத்தே (Mikate) என்பது காங்கோ நாட்டில் மிகவும் பிரபலமான இனிப்பு ஸ்நாக் ஆகும். மென்மையான மாவில் தயாரித்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கப்படும் இந்த சிறிய உருண்டைகள், காலை உணவாகவும், மாலை நேர ஸ்நாக்காகவும் விரும்பி சாப்பிடப்படுகின்றன. வெளியில் சற்று கரகரப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும்.
தேவையான பொருட்கள் (Ingredients)
மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
வெதுவெதுப்பான தண்ணீர் – தேவையான அளவு
வனிலா எசன்ஸ் / ஏலக்காய் பொடி – சிறிதளவு (விருப்பப்படி)
எண்ணெய் – பொரிப்பதற்கு

தயாரிக்கும் முறை (Preparation Method)
ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, உப்பு, ஈஸ்ட் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
மெதுவாக வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, கெட்டியான தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
மாவை மூடி வைத்து, சூடான இடத்தில் 1–2 மணி நேரம் ஊறவிடவும். மாவு இரட்டிப்பாக உயரும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
ஈரமான கையால் அல்லது கரண்டியால் மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும்.
மிதமான தீயில் பொன்னிறமாக வரும் வரை திருப்பித் திருப்பி பொரிக்கவும்.
எண்ணெய் வடிந்ததும் எடுத்து பரிமாறவும்.
English Summary
One bite one smile Congo morning sweet hit Mikate