ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்: தீவிரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்த போலீசார்! வசமாக சிக்கிய கும்பல்!
Jammu and Kashmir Terrorist gang Police arrested
ஜம்மு-காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தின் எல்லை தாண்டி ஆயுத கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பாரமுல்லா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்திருப்பதாவது, 'ஜன்பாஸ்போரா பாரமுல்லா பகுதியைச் சேர்ந்த யாசீன் அகமது ஷா திடீரென தலைமறைவானது ஆதாரங்கள் மூலம் போலீசாருக்கு தெரிய வந்தது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் யாசீன் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்புடன் சேர்ந்தது தெரியவந்தது.
இந்நிலையில் சோதனை சாவடியில் நடைபெற்ற சோதனையின் போது தலைமறைவாக இருந்த யாசீன் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த கைது துப்பாக்கி, ஆயுதங்கள், எரிகுண்டுகள், வெடி மருந்து உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் யாசீன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உத்தரவின்படி ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை எல்லை தாண்டி கடத்தும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் இந்த கடத்தலில் உதவிய நிஜீனா, ஆயத் என்ற 2 பெண்கள் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.
English Summary
Jammu and Kashmir Terrorist gang Police arrested