ஜம்மு-காஷ்மீர் தேர்தல் : 44 வேட்பாளர்களை அறிவித்த பாஜக.....காங்கிரசை முறியடிக்க பாஜக திட்டம்? - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக  செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதி வரை என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.


மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அங்கு அடுத்த மாதம் தேர்தல் என்பதால், அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் பாஜக 44 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டுள்ளது.

அதில், ஜம்முவில் உள்ள பாம்போர், ஷோபியான், அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக் உள்ளிட்ட ஜம்மு பகுதி தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அரவிந்த் குப்தா, யுத்வீர் சேதி முறையே ஜம்மு மேற்கு மற்றும் ஜம்மு கிழக்கு தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேவேந்திர சிங் ராணா நக்ரோட்டா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் தனது கோட்டையாக விளங்கும் ஜம்முவில் அந்த கூட்டணியின் திட்டத்தை முறியடிக்க பாஜக அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jammu and Kashmir Elections BJP Announces Candidates BJPs Plan to Defeat Congress


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->