'பாகிஸ்தான் கஹூதா அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்திரா காந்தி அங்கீகரிக்காதது வெட்கக்கேடு': சிஐஏ முன்னாள் அதிகாரி குற்றசாட்டு..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே, கஹூதா அணுசக்தி நிலையம் அமைந்துள்ளது. இது அந்நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு இந்த மையம் தான் முக்கியமாக திகழ்கிறது. பாகிஸ்தான் அணுஆயுதங்களை தயாரிக்காமல் இருப்பதற்கும், ஈரானுக்கு வழங்காமல் இருப்பதற்கும், 1980களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்த இந்த அணுசக்தி மையம் மீது தாக்குதல் நடத்துவது என இந்தியாவும், இஸ்ரேலும் திட்டம் தீட்டியதாக ஒரு தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், 1980 களில் அணுஆயுத பெருக்கம், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தடுப்பதற்காக பாகிஸ்தானில் பணியாற்றிய சிஐஏயின் முன்னாள் அதிகாரியான ரிச்சர்ட் பார்லோவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

1982 முதல் 1985 வரை அரசின் சார்பில் எந்தப் பணியிலும் நான் இல்லை. அந்த காலகட்டத்தில் அது நடந்து இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கஹூதா அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்தியா - இஸ்ரேல் திட்டம் குறித்து கேள்விப்பட்டேன். ஆனால், நடக்காததால், அந்த விவகாரம் தொடர்பாக நான் கவனிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அனுமதி கொடுக்காதது வெட்கப்பட வேண்டியது. இது மட்டும் நடந்திருந்தால், ஏராமான பிரச்னைகள் தீர்ந்திருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

அத்துடன், அப்போது அமெரிக்க அதிபராக ரோனால்ட் ரீகன் அரசு ஆப்கானிஸ்தானில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மறைமுக போர் தொடுத்து இருந்தது என்றும் கூறியுள்ளார். அந்த நேரத்தில் தாக்குதல் நடந்தால், அது இந்த போரை பாதிக்கும் என இஸ்ரேலுக்கு ரீகன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதனை பாகிஸ்தான் சாதகமாக பயன்படுத்தி கொண்டது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is shameful that Indira Gandhi did not approve the attack on Pakistan's Kahuta nuclear power plant a former CIA officer alleges


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->