ஆதித்யா-L1 இப்போ எங்க இருக்கு தெரியுமா? இஸ்ரோவின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆதித்யா L-1 விண்கலத்தை பி.எஸ்.எல்.சி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் ராக்கெட் புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடத்திலேயே வெற்றிகரமாக பிரிந்து சூரியன் நோக்கி தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்தது.

புவிவட்ட பாதையில் தனது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக 4 முறை அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கி.மீ தொலைவுக்கு அப்பால் பயணித்து, பூமியின் தாக்கக் கோள மண்டலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) நோக்கி அதன் பாதையில் ஆதித்யா L-1 தற்போது சென்று கொண்டிருக்கிறது.

இஸ்ரோ பூமியின் தாக்க கோள மண்டலத்திற்கு வெளியே ஒரு விண்கலத்தை அனுப்புவது தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றியாளராக அனுப்பியுள்ளது. இதற்கு முன்பு முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO Latest Update on Aditya L1 mission


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->