நடுவழியில் குலுங்கிய இண்டிகோ விமானம் - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது, இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக பயங்கரமாக குலுங்கியது. இதனால், பயணிகள் பயத்தில் உயிரைப் பிடித்துக்கொண்ட படி அமர்ந்திருந்தனர்.

ஆனால், சிறிது நேரத்தில் நிலைமை சீரடைந்ததையடுத்து விமானம் சீராக சென்று, ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறங்கியது. இதுகுறித்து விமான நிறுவனம் சார்பில், சீரற்ற வானிலை நிலவும் டர்புலன்ஸ் பகுதியில் சென்றபோது விமானம் குலுங்கியதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, டர்புலன்சில் சிக்கி விமானம் குலுங்கும்போது பயணிகளால் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகருக்குச் செல்லும் மற்றும் ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indigo flight shaken in mid way


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->