எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு; அகமதாபாத்தில் தரையிறக்கிய இண்டிகோ விமானம்; டெல்லி வான்வெளியில் தாக்கம்..?
IndiGo flight lands in Ahmedabad due to volcanic eruption in Ethiopia
எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கிக் கொண்டு இருந்த 'ஹேலி குப்பி' என்ற எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் 6E 1433, விமானம் ஆமதாபாத்தில் தரையிறக்கபட்டுள்ளது. குறித்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது,
எரிமலை வெடித்ததன் காரணமாக வெளியான சாம்பல்கள் வான்வெளியில் கலந்து, அதன் தாக்கம் வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவை நோக்கி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்ணூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானம் உடனடியாக ஆமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
எரிமலை வெடிப்பு வான்வெளியில் விமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, இன்று (நவம்பர் 24) மாலை முதல் டில்லி மற்றும் ஜெய்ப்பூர் வான்வெளியில் ஏதேனும் தாக்கம் ஏற்படலாம் என்பதால் விமான போக்குவரத்து அதிகாரிகளும், விமான நிறுவனங்களும் கண்காணித்து வருகின்றன.

இது குறித்து ஆகாசா ஏர் நிறுவனம் தமது பயணிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது;
'எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்துச் சிதறி உள்ளதால், அதன் தாக்கம் வான்வெளியில் இருக்கும் என்று நம்புகிறோம். இதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
சர்வதேச விமான ஆலோசனைகள், பாதுகாப்பு நெறிமுறைகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகாசா ஏர் விமான நிறுவனத்தில், பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்.' என்று இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
English Summary
IndiGo flight lands in Ahmedabad due to volcanic eruption in Ethiopia