தன்மாத்ரா படத்தின் ‘அந்த’ காட்சி… மோகன்லால் நிர்வாணமாக நடித்த தருணம் – அதிர்ச்சி தகவலை சொன்ன மீரா வாசுதேவன்!
That scene from the movie Thanmathra The moment Mohanlal acted naked Meera Vasudevan revealed shocking information
சமுத்திரக்கனி இயக்கிய உன்னைச் சரணடைந்தேன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மீரா வாசுதேவன், பல தமிழ்–மலையாள படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனது மூன்றாவது திருமணம் பிரிந்ததாக வெளிவந்த நிலையில், விவாகரத்து குறித்து பேசாமல், மோகன்லாலுடன் நடித்த தன்மாத்ரா படத்தின் ஒரு முக்கிய அனுபவத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
2005ஆம் ஆண்டு வெளியான இந்த மலையாள படத்தை பிளெஸ்ஸி இயக்கியிருந்தார். அல்சைமர் நோயால் குடும்பம் எப்படி சிதறுகிறது என்பதைக் கதையாக்கிய இந்த படம், 150 நாட்கள் ஓடி, மாநில விருதுகளும், தேசிய விருதையும் வென்றது. இதில் மோகன்லாலின் மனைவியாக மீரா நடித்திருந்தார்.
ஒரு தனிப்பட்ட, முக்கியமான படுக்கையறை காட்சியைப் பற்றி மீரா கூறியதாவது:ஆ காட்சியில் மோகன்லால் உண்மையில் ஆடை இன்றி நடித்ததாக அவர் தெரிவித்தார். அந்த காட்சி அவசியமா என்று அவர் இயக்குநரிடம் கேட்டபோது, “இந்தக் காட்சி தான் கதையின் மையம்; கணவன்–மனைவி நெருக்கமான தருணத்தில், சுவரில் பல்லி இருப்பதை பார்த்தவுடன் பயந்து எழும் கணவனின் செயலில், மனைவி முதன்முறையாக அவர் நடக்கிற விதத்தில் மாற்றம் இருப்பதை கவனிக்கிறார். இதுவே படத்தின் திருப்பம்,” என்று இயக்குநர் விளக்கியதாக கூறினார்.
காட்சிக்கு முன் மோகன்லால் வந்து “மன்னிக்கவும்” என்று கூறினார் என்றும் மீரா பகிர்ந்துள்ளார்.“நான் எந்த சங்கடமும் இல்லாமல் ‘நடிங்க சேட்டാ’ என்றேன். மிகக் குறைந்த குழுவுடன் அந்த காட்சி படமாக்கப்பட்டது. பயத்துடன் அல்ல, கதைக்காக இருவரும் முழு மனதுடன் நடித்தோம்,” என அவர் கூறினார்.“எங்களுக்கு சங்கடமான அந்தக் காட்சி தான், படத்தின் வெற்றியின் முதற்கட்ட காரணம்,” என்று மீரா வாசுதேவன் தெரிவித்திருந்தார்.
English Summary
That scene from the movie Thanmathra The moment Mohanlal acted naked Meera Vasudevan revealed shocking information