ரீமேக் படத்தை நிராகரித்த துருவ் விக்ரம்! மாரி செல்வராஜ் செய்த அட்வைஸ்?.. துருவ் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு?
Dhruv Vikram rejected the remake Mari Selvaraj advice Dhruv Vikram drastic decision
‘பைசன் – காளமாடன்’ படத்தின் வெற்றிக்குப் பின், துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தைப் பெற்றுள்ளார். மாரி செல்வராஜின் இயக்கத்தில் வந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 50 கோடியைத் தாண்டி சக்கைப் போடு போட்டதில், துருவின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, துருவின் அடுத்த படம் என்ன? அவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.
குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், துருவின் முதல் இரண்டு படங்கள் ஆதித்ய வர்மா மற்றும் மகான் அவருக்கு எதிர்பார்த்த உயர்வை தரவில்லை. இதனால் மிக நீண்ட நேரம் காத்திருந்து பயிற்சிகளை எடுத்து, கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘பைசன்’ படத்தில் நடித்தார். இப்படம் துருவின் திறமையை வெளிப்படுத்திய முக்கிய திருப்பமாக அமைந்தது.
பைசன் வெற்றிக்குப் பின், ஹிந்தியில் சென்சேஷனாக வெற்றி பெற்ற “Kill” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொள்ள துருவுக்கு அழைப்பு வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதிலும், அவர் ஓகே சொல்லும் தருவாயில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.ஆனால், இதே சமயம் மாரி செல்வராஜ் துருவுக்கு ஒரு முக்கிய ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
அது —“ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம். உன் தனித்துவத்தை உருவாக்க இது சரியான நேரம். ரீமேக்குகள் உன்னுடைய வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.”
மாரியின் இந்த வார்த்தைகள் துருவின் முடிவை முழுமையாக மாற்றிவிட்டன. இதனால், துருவ் ‘Kill’ ரீமேக்கை நிராகரித்துவிட்டார். தன்னுடைய அடுத்த படமும் தனித்த கதையுடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர் தற்போது புதிய திரைக்கதை தேர்வில் மிக கவனமாக இருக்கிறார்.
பைசன் வெற்றிக்குப் பின், துருவ் மாரியை தன் குருவாகவே கருதுகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாரியின் தாக்கத்தால் தான் துருவின் திரைப்பட முடிவுகள் தற்போது மிக மெச்சப்பட்ட முறையில் செல்கின்றன என்றும் கூறப்படுகிறது.
இதனால், துருவ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அவரது அடுத்த படம் மீண்டும் ஒரு மாபெரும் கதையுடனும், வித்தியாசமான கதாபாத்திரத்துடனும் வரப்போகிறது என்பதே தற்போது பேசப்படும் செய்தி.துருவின் அடுத்த முடிவு என்ன? அவர் எந்த இயக்குநரைத் தேர்வு செய்வார்?தமிழ் சினிமா இதை ஆவலுடன் காத்திருக்கிறது.
English Summary
Dhruv Vikram rejected the remake Mari Selvaraj advice Dhruv Vikram drastic decision