ராம் பொதினேனியின் ‘ஆந்திரா கிங் தாலுகா'! என் கேரியரை உயர்த்தும் மாபெரும் படம் இது...! - நடிகர் உருக்கம்
Ram Pothinenis Andhra King Taluka This great film that boost my career Actor Urukkam
ராம் பொதினேனியின் ‘ஆந்திரா கிங் தாலுகா’ தற்போது தெலுங்கு திரையுலகில் அதிகம் பேசப்படும், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த மிகுந்த எதிர்பார்ப்பு சூழ்ந்த படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளைத் தாக்க தயாராக உள்ளது.

சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்களின் கோஷங்களால் களைகட்டியது. அங்கு பேசுகையில், ராம் பொதினேனி, “ஆந்திரா கிங் தாலுகா என் கேரியரில் மிக முக்கியமான, பெருமைசேர்க்கும் படம்” என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
உபேந்திரா மற்றும் இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் பிரமாண்டமாக களமிறங்கியுள்ளனர். இப்படத்திற்காக வெளியான பாடல்கள், போஸ்டர்கள், டீசர், டிரெய்லர், அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன.
English Summary
Ram Pothinenis Andhra King Taluka This great film that boost my career Actor Urukkam