'தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு போன்றவற்றால் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் அதிமுக இழந்துவிட்டது': ஓ.பன்னீர்செல்வம்..!
O Panneerselvam says AIADMK has lost the support of the entire people
அதிமுகவின் தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு போன்ற நடவடிக்கையால் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் அதிமுக இழந்துவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், எடுக்கும் முடிவு தொண்டர்கள் விரும்பும் முடிவாக இருக்கும் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வைத்திலிங்கம் கூறியுள்ளதாவது:
இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி தொடங்கப்படும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இறுதி முடிவு எடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகமாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.
English Summary
O Panneerselvam says AIADMK has lost the support of the entire people