'விவசாயிகளுக்கு துரோகம் செய்த திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்': எடப்பாடி பழனிச்சாமி..! - Seithipunal
Seithipunal


'விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் அரசு திமுக அரசு. விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் சினிமா பார்க்க முதல்வரை செல்வதாகவும், விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசுதான் என  அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியதாவது: நிரந்தர டிஜிபி நியமனத்தில் திமுக அரசுக்கு தடுமாற்றம் ஏன்? எனவும், நிரந்தர டிஜிபி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. ஆனால், எனக்கு அருகதை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகிறார், ஆனால், எனக்கு அருகதை உள்ளது. உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாநில அரசு தான் டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பான பட்டயலை அனுப்ப வேண்டும் என்றும், பட்டியலில் இடம்பெற்றுள்ள 03 பேரும் தமிழக அரசுக்கு கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதினால் தான் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர், தவறாக இப்படி பேட்டி கொடுப்பது வெட்கக்கேடான விஷயம் என்றும், இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு எப்படி உருப்படியாகும் என்றும், உண்மை செய்திகளை மக்களிடம் சொல்ல வேண்டும் எனவும்,  மக்களுக்கு ஏதும் தெரியாது என நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.

அத்துடன், நெல் கொள்முதல் விஷயத்தில் திமுக அரசு மெத்தனமாக, அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதால் விவசாயிகள் துன்பப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி படுகை மாவட்டங்களில் 06 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

முன்கூட்டியே திட்டமிட்டு பயிரகளை அறுவடை செய்திருந்தால் நெல் மழையில் நனைத்திருக்காது எனவும், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி குறைவு உள்ளது. இதுதான் உண்மை நிலை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த 04 ஆண்டுகளில் குறவை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால், அவர்கள் நஷ்டத்தை சந்தித்தனர் என்றும், விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் அரசு திமுக அரசு என்றும், விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் சினிமா பார்க்க செல்கிறார் முதல்வர். விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசுதான் என்று பேசியுள்ளார்.

அத்துடன், என்னை பச்சை துண்டுபோட்ட விவசாயி என ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் என்றும், நான் விவசாயிதான் அனைவருக்கும் தெரியும். எம்எல்ஏ ஆனது முதல் விவசாயம் செய்து வருகிறேன் எனவும், மறைத்து சொல்லவில்லை. அது தான் எனது தொழில் என்று தெவித்துள்ளார்.

ஆனால், விவசாயிகளுக்கு துரோகம் செய்த அரசு திமுக அரசு ஆனால், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சி செய்தவர் ஸ்டாலின். அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பதினால் என்னை விமர்சனம் செய்கிறார்.

நெல் ஈரப்பதம் 22 சதவீமாக ஆக உயர்த்தும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த காரணத்தை சொல்லவில்லை என்றும் என்ன காரணத்துக்காக நிராகரித்தார்கள் என சொன்னால் தானே பதில் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளதோடு, 03 வேளாண் சட்டங்கள் என்னவென முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் சொல்லட்டும். நான் சொல்கிறேன். தமிழக விவசாயிகள் எப்படி அச்சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன், அவர் தொடர்ந்து பேசுகையில், அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டது கிடையாது. கோரிக்கைகளை நீங்கள் தான் போராடி வாங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தான் அதை செய்ய வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து காவிரி பிரச்சினையில் அதிமுக எம்பிக்கள் பார்லிமென்ட்டை முடக்கினார்கள் என்றும், நீட் பிரசிச்னை பற்றி திமுகவினர் பேசினார்கள். பார்லிமென்டில் பேச முடிந்ததா.? பேசினால், நீங்கள் செய்த ஊழல் வெளியே வந்துவிடும் என அச்சம. என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில் அவர்களுக்கு பயம். 100க்கு 100 வெற்றி என மார் தட்டக்கூடாது. ஓட்டு போட்ட மக்களுக்க நன்மை செய்யணும் என்றும்  39 எம்பிக்களை வைத்து இருந்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படும்போது வாதாடி, போராடி பெறத்தான் உங்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால், அதை மறந்து பேசி கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் செய்ய மறந்ததை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதனை பற்றி கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், ஓ.பன்னீர்செல்வம் பிரச்சினை முடிந்து போன ஒன்று என்றும், அரைத்த மாவையே அரைக்கறீர்கள். எஸ்ஐஆரில் என்ன பிரச்சினை உள்ளது. நீங்கள் நியமித்த ஆட்சியர்கள்தான் தான் செயல்படுத்துகின்றனர். வீட்டுக்கு வீடு திமுகவினர் நிற்கின்றனர். அதிகாரிகளை நியமித்து கட்டுக்கட்டாக படிவங்களை கொடுக்கின்றனர். தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். அடுக்குமாடி குடியிருப்புகளில் திமுகவினரை கையெழுத்து போட்டு படிவங்களை கொடுக்கின்றனர். இந்த முறைகேடு களைய வேண்டும் என்று நிருபர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers are in turmoil over DMK government that betrayed them says Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->