'போர் ஒருபோதும் பழி வாங்குவதற்காகவோ அல்லது லட்சியத்திற்காகவோ அல்ல, கட்டாயப்படுத்தினால் தகுந்த பதிலடி நிச்சயம்'; பாதுகாப்புத்துறை அமைச்சர் திட்டவட்டம்..! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார் உரையாற்றினார். அப்போது, 'இந்தியா ஒரு போதும் போரை விரும்பவில்லை. ஆனால் கட்டாயப்படுத்தப்பட்டால், பின்வாங்காது, பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்' என கூறியுள்ளார்.

அத்துடன், பஹல்காமிற்குச் சென்ற அப்பாவி சுற்றுலாப் பயணிகள் தங்கள் மதம் குறித்து கேட்ட பிறகு கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்தியாவின் கண்ணியம் அதன் பலவீனம் என்று நம்பினர். எங்கள் பொறுமையை பலவீனம் என்று தவறாகக் கருதியவர்களுக்கு, 'ஆப்பரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை மூலம் ஒரு பதில் கிடைத்தது, அவர்கள் அதை இன்னும் மறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா போரை விரும்பவில்லை என்பதை உலகிற்கு விளக்கினோம் என்றும், போர் ஒருபோதும் பழி வாங்குவதற்காகவோ அல்லது லட்சியத்திற்காகவோ அல்ல என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியா ஒரு போதும் போரை விரும்பவில்லை என்றும், ஆனால், அதற்கு கட்டாயப்படுத்தப்பட்டால், இந்தியா பின்வாங்காது, தகுந்த பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டைப் பாதுகாப்பதற்கும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்கும் 'ஆப்பரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்,  இந்த ராணுவ நடவடிக்கையின் போது கிருஷ்ணரின் வழிகாட்டுதலை நாங்கள் பின்பற்றியதாகவும், கீதையின் அறிவு மட்டுமே தீர்வுகளை வழங்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, ஒரு நபரின் நடத்தை அவரது எண்ணங்களால் வடிவமைக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், இன்று, உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் கீதை பற்றிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கீதை ஒரு ஆன்மிக அல்லது மத நூல் மட்டுமல்ல, ஒரு உலகளாவிய வாழ்க்கை வழிகாட்டி என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Defense Minister says that if war is forced a befitting response will be certain


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->