மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் இராணுவம்.. இந்திய இராணுவ அதிகாரி வீரமரணம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி, காஷ்மீரில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் இந்திய குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகியுள்ளது. இவ்வாறு ஒருபுறம் இராணுவத்தினை பதற்றப்படுத்தி, மற்றொரு புறம் எல்லைமீறி ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது. 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய இராணுவம் சார்பாகவும் தக்க பதிலடி வழங்கப்பட்டு வரும் நிலையில், இருதரப்பிலும் உயிர் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், இன்று காலை அங்குள்ள ரஜோரி மாவட்டத்தின் நவஷெரா செக்டரில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவமும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரி ஹவில்தார் பாட்டீல் சங்ரம் வீரமரணம் அடைந்தார். இதனால் எல்லை பகுதியில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Army Officer Passed Away in Jammu Pak Army Case Fire Attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal