இந்தியா - பங்களாதேஷ் இடையே இன்று முதல் மீண்டும் ரயில்கள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா பங்களாதேஷ் இடையே 3 ரயில் சேவைகள் எழுதப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது இரு நாடுகளிலும் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், இன்று முதல் இருநாடுகளுக்கும் இடையே பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா - டாக்கா இடையே கொல்கத்தா மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், கொல்கத்தா - குல்னா இடையே கொல்கத்தா பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது என்று கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இரு நாடுகளிலும் உள்ள பயணிகள் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரயில்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India-Bangladesh trains to resume operation from today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->