#வீடியோ || அமெரிக்காவில் அரிசி பஞ்சம்! திண்டாடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்வேறு காரணங்களால் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அரிசி விலை 3% வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் வருவதால் உள்நாட்டில் அரிசிக்கான தேவையும் அதிகரிக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதனால் அரிசி விலை மேலும் அதிகரிக்க கூடும். இந்த நிலை தொடர்ந்தால் உள்நாட்டில் அரசியின் விலையை கட்டுக்குள் வைக்க முடியாத சூழல் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு பாஸ்மதி அல்லாத அனைத்து வகை அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதித்தது. இதுகுறித்து வர்த்தக துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "பாஸ்மதி அல்லாத எந்த வகை அரிசியையும் ஏற்றுமதி செய்யக்கூடாது. ஏற்்கனவே ஏற்றுமதிக்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள அரிசிக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாஸ்மதி அல்லாத அரிசி கிடைக்காமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அரிசி கிடைக்காமல் தற்பொழுது சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 15 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு அரிசி பாக்கெட்டின் விலை தற்பொழுது 30 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது . அதனை வாங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரேஷன் கடையில் நிற்பது போல் வரிசையில் காத்து க்கொண்டிருக்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு ஒரு பாக்கெட் அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India ban on rice export upset Indians living abroad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->