பாகிஸ்தானின் தலைநகரை தாக்கிய இந்தியா! உச்சகட்ட பதற்றம்!
India Attack Pakistan
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமான ஏவுகணைத் தாக்குதலால் அழித்தது.
பாகிஸ்தான் இன்று அதிகாலையில், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலை, இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக அழித்தது.
இதற்குப் பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் டிரோன் தாக்குதலை நடத்தியது. இதில் லாகூரின் முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் சேதமடைந்தன.
இந்த நிலையில், இரவு 9 மணி அளவில் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து தாக்கிய பாகிஸ்தான் டிரோன்களை, இந்தியா ஜெய்சல்மேர் பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டு அழித்தன.
மேலும், பதான்கோட், குப்வாரா, பாராமுல்லா பகுதிகளில் பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் எல்லைப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்திய இராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு அமெரிக்க முழு ஆதரவை தருவதாகவும் சற்றுமுன் தெரிவித்துள்ளது. பிரதமர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகரை நோக்கி இந்தியா தாக்குதல். இஸ்லாமாபாத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.