தொடர் பண்டிகை நாள்: ரெயில் பயணிகளுக்கு அசத்தலான சலுகையை அறிவித்த ரெயில்வே அமைச்சகம்!
Indain Railway festival offer
இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால், பலர் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் நிலை உருவாகிறது. இதை முன்னிட்டு, ரெயில் பயணிகளுக்கு சலுகை வழங்க ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் ரிட்டன் டிக்கெட் முன்பதிவு செய்தால், அந்த ரிட்டன் டிக்கெட்டிற்கு மட்டும் 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். அக்டோபர் 13 முதல் 26 வரை பயணிக்க முன்பதிவு செய்யும் ரிட்டன் டிக்கெட்டுகளுக்கும், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை முன்பதிவு செய்யும் ரிட்டன் டிக்கெட்டுகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.
இதற்கான முன்பதிவு நடைமுறை, தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் விதிப்படி, வருகிற 14 ஆம் தேதி தொடங்கும். அதாவது, 14 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட தேதிகளில் பயணம் செய்யும் ரிட்டன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மேலும், வழக்கமான பயண முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை ரிட்டன் டிக்கெட்டாக மாற்ற முடியாது. ரிட்டன் டிக்கெட் செய்வதற்கான அட்வான்ஸ் ரிசர்வேசன் காலம் 60 நாட்களைத் தாண்டாது, மேலும் அந்த 60 நாட்களுக்குள் போகும் மற்றும் திரும்பும் பயணத் தேதிகள் இருக்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Indain Railway festival offer