ஏரியா சிங்கங்களாக சுற்றிவந்த நாய்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. ஊரடங்கிலும் மனிதாபிமானம் காட்டிய பெண்மணி..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் பல அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பாக நகராட்சி ஊழியர்கள் தெருக்களில் கிருமி நாசினிகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களும் தங்களுக்கு தெரிந்த சாணம், மஞ்சள் நீர் மற்றும் வேப்பிள்ளைகளுடன் தங்களை பாதுகாக்க தேவையான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இதனை வினோதமாக காட்டும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் தங்களின் கழுத்தில் வேப்பில்லையை மாலை போல போட்டுகொண்டு சென்றது மக்களிடையே பெரும் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது. 

இந்த நிலையில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான நாய், பூனை மற்றும் கிளி போன்றவை வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், தெருக்களில் இருக்கும் நாய் மற்றும் பூனைகள் வீதிகளில் இருக்கும் சில நல்ல உள்ளம் கொண்ட நபர்கள், குப்பை தொட்டிகள் மூலமாக தங்களின்  

நாய், பூனை, கிளி போன்றவை வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் ஆகும். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வீதிகளில் திரியும் நாய்கள் உணவு எதுவும் கிடைக்காமல் சுற்றி சுற்றி வருகின்றன.

புதுவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 ஆண்டுகளாக வீதிகளில் திரியும் தெருநாய்களுக்கு இருப்பிடம் தேடிச்சென்று உணவு வழங்கி வருகிறார். இதற்காக அவருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. இதற்கு அவரது மகன்கள் உதவியாக உள்ளனர். கொரோனாபீதியிலும் கருணை உள்ளத்தோடு வீதிகளில் திரியும் நாய்களுக்கு தவறாமல் உணவு அளித்த அந்த பெண்ணை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery woman gives food for street dogs


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal