பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்து ருசிகண்ட சோகம் பெருங்குற்றம்... காவல் துறையினரின் விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஒசபாலானகர் பகுதியை சார்ந்தவர் பசவராஜ். இவர் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் லட்சுமி. இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய அர்ஜுன் என்ற குழந்தை இருக்கும் நிலையில், இக்குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். 

சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி சென்ற நிலையில், இது தொடர்பாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சிறுவன் இரண்டு நாட்கள் கழித்து அங்குள்ள மல்லேசுவரம் பகுதியில் சுற்றித்திரிந்த குழந்தையை மீட்டு ஒப்படைத்துள்ளனர். 

இது தொடர்பான விசாரணைக்கு பின்னர், குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்று சாலையில் விட்டுள்ளது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த கடத்தல் கும்பலை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், வித்யாரண்யபுரா பகுதியில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், ஸ்ரீராம் புரம் பகுதியை சார்ந்த கர்ணா (வயது 48) மற்றும் இரண்டு இளம் சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

கர்ணாவிற்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், கர்ணா மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ பிடிக்காது இருந்துள்ளார். இவர் தனியாக வசித்து வந்த நிலையில், மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக குழந்தை பிறந்துள்ள நிலையில், கர்ணாவுடன் வாழ பிடிக்காமல் பெண் ஓடியுள்ளார். பின்னர் தனது குழந்தையை உறவினருக்கு ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து குழந்தைக்கு பணம் அதிகளவில் கிடப்பதை வைத்து ருசியறிந்த கர்ணா, சம்பவத்தன்று பசவராஜ் - லட்சுமியின் தம்பதிகளின் குழந்தையை கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், குழந்தையை விற்பனை செய்ய இயலாததால் சாலையில் விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்துள்ளனர். சிறுவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Maharashtra child kidnapped police investigation shocking report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->