காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சார்ந்த தீவிரவாதி கைது..! வெளியான அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பண்டிகை காலத்தினை தங்களுக்கு சாதகமாக உபயோகம் செய்து தாக்குதல் நடத்துவதற்காக டெல்லியில் 4 பயங்கரவாதிகள் வந்துள்ளதாக உளவுத்துறையின் சார்பாக எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள முக்கிய நகர்ப்பகுதிகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370 சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு இரத்து செய்து அறிவித்ததை அடுத்து., ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரேதேசமாக மாற்றி., தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இந்த நடவடிக்கையானது பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

இதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் செயல்பட்டு வரும் நிலையில்., இந்தியாவின் முக்கிய தலைவர்களுக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும்., இதன் காரணமாக இந்தியாவின் முக்கிய தலைவர்ளுக்கு பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. மேலும்., பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் இந்தியாவில் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும்., விமானப்படை தளங்கள் தற்கொலைப்படை தாக்குதல் மூலமாக தாக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

terrorist,

இதனைத்தொடர்ந்து விமானப்படை தளங்கள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தருணத்தில்., இந்தியாவில் தற்போது பண்டிகை காலமானது துவங்கவுள்ள நிலையில்., இதனை சாதகமாக உபயோகம் செய்து தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்., இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெறும் துர்கா பூஜை., ராம்லீலா., தீபஒளி திருநாள் கொண்டாட்டத்தின் போது நாச வேளையில் பயங்கரவாதிகள் ஈடுபடலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலை மேற்கொள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினை சார்ந்த 4 பயங்கரவாதிகள் டெல்லியில் ஊடுருவி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி காவல் துறையினர் கடுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்., தற்போது காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சார்ந்த தீவிரவாதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். 

காஷ்மீரின் வடக்குப்பகுதியில் இருக்கும் பாராமுல்லா மாவட்டத்தினை சார்ந்த இடங்களில் பயங்கரவாதத்தை மேற்கொள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினை சார்ந்த மூன்றாவது தலைவன் மொஹ்சின் மன்சூர் சல்ஹியா என்பவனை காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவன் அங்குள்ள பாராமுல்லாவில் மறைமுகமாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kashmir jaish e mohammad terrorist third leader arrested by police


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal