மனைவியின் தலையை அரிவாளால் வெட்டி வீதியில் உலா வந்த கொடூரன்..! தலைதெறித்து ஓடிய மக்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் பட்டப்பகலில் மனைவியின் தலையை வெட்டி இரத்தம் சொட்ட சொட்ட தெருவில் நடந்து வந்ததை கண்டு மக்கள் அலறியடித்து ஓடிக்கொண்டு இருந்தனர். இதனை கண்ட மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., விஜயவாடா அருகில் உள்ள சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் மணி கிராந்தி - பிரதீப். இவர்கள் இருவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். 

ஆந்திரா மனைவி கழுத்தறுத்து கொலை, andra predesh, andra predesh wife killed,

இதன் காரணமாக மணி கிராதியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் பிரதீப் வழக்கு தொடுத்திருந்த நிலையில்., இது தொடர்பாகவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சமயத்தில்., பிரதீப் நேற்று வீட்டிற்கு வந்த நிலையில்., விவாகரத்து தொடர்பாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இந்த சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்த நிலையில்., மனைவி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தனது மனைவியை கொலை செய்த கொடூரன் அரிவாளால் தலையால் தனியாக நறுக்கி வீதியில் உலா வந்துள்ளான். பின்னர் காவல் துறையினர் கைது செய்த நிலையில்., இது தொடர்பான விசாரணையில் இந்த தகவலானது வெளிவந்துள்ளது. இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in andra predesh wife killed by husband due to family problem


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal