கள்ளக்காதலனுடன் வாழவேண்டும் என பிடிவாதம்...! காவலர்கள் கண் முன்னே மனைவியை குத்திக்கொன்ற கணவன்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த குடும்பச் சிக்கல், கொடூரமான கொலைச் சம்பவமாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தும்மன் பள்ளியை சேர்ந்த சித்தாரெட்டி (35), ஜாகிராபாத்தில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி கவிதா (29) தையல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இத்தம்பதிக்கு 9 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர்.இதற்கிடையில், கவிதாவுக்கு திருப்பதி அருகிலுள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்த பவன்குமார் ரெட்டி (32) என்பவருடன் சமூக வலைதளம் வழியாக அறிமுகம் ஏற்பட்டது. அது பின்னர் கள்ளக்காதலாக மாறிய நிலையில், அவருடன் சேர்ந்து வாழ கவிதா முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த மாதம் 27ஆம் தேதி கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு வெளியேறி, ஜட்செர்லாவில் தங்கி இருந்த பவன்குமார் ரெட்டியிடம் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்தாரெட்டி, மனைவியை காணவில்லை என காவலர்களிடம் புகார் அளித்தார். விசாரணையில், கவிதா ஜட்செர்லாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மனைவியை அழைத்து வர சித்தாரெட்டி, காவலர் காதிருடன் காரில் ஜட்செர்லா சென்றார். அங்கு கவிதா மற்றும் பவன்குமார் ரெட்டிக்கு காவலர்கள் அறிவுரை வழங்கி, கணவருடன் திரும்ப செல்லும்படி கூறினர். ஆனால், கள்ளக்காதலனை விட்டு வர முடியாது என கவிதா மறுத்து, கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் காவலர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.இதன் தொடர்ச்சியாக, சமரசத்தின் பேரில் கவிதா ஜாகிராபாத்திற்கு திரும்ப சம்மதித்தார். காரின் முன்பக்க இருக்கையில் காவலர் அமர, பின்புற இருக்கையில் கவிதா, சித்தாரெட்டி மற்றும் பவன்குமார் ரெட்டி அமர்ந்து பயணம் தொடர்ந்தனர்.

சதாசிவபேட்டை அருகே வந்தபோது, டீக்கடையில் வாகனம் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் சித்தாரெட்டி அங்கிருந்த கடையில் இருந்து கத்தி ஒன்றை வாங்கி யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொண்டார்.பின்னர் பயணம் தொடங்கிய சில நேரத்திலேயே, ஆத்திரம் அடக்க முடியாமல் இருந்த சித்தாரெட்டி திடீரென கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் குத்தினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர் உடனடியாக கத்தியை பறித்தார்.

ஆனால் அதற்குள் கவிதா கடுமையாக காயமடைந்து ரத்தம் சிந்தினார்.உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் காவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சித்தாரெட்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Insisting living murderer husband stabbed his wife front police


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->