பொருளாதார அதிர்வை சமாளிக்க அரசு தயார்....! ரூ.2.50 லட்சம் கோடி கடன் பாதுகாப்பு திட்டம் - மத்திய அரசு பரிசீலனை - Seithipunal
Seithipunal


மேற்காசியப் போர் தீவிரமடைந்ததால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு, குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உயிர்காக்கும் நிவாரணமாக, ரூ.2.50 லட்சம் கோடி மதிப்பிலான மிகப்பெரிய கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து வெளியாகிய தகவலின்படி, நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு பாதுகாப்பு கவசமாக இந்த திட்டம் அமையும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மேற்காசியப் போர் விளைவாக ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலை உருவானால், ரூ.100 கோடி வரை உள்ள கடன்களுக்கு சுமார் 90 சதவீதம் வரை திருப்பிச் செலுத்தப்படும் உத்தரவாதத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் திட்டம் தயாராகி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவாதம், அரசின் தேசிய கடன் உத்தரவாத அமைப்பின் மூலம் வழங்கப்படும் எனவும், இதற்காக அரசு ரூ.17,000 கோடி முதல் ரூ.18,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.இதற்கிடையில், நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கடன் வளர்ச்சி வேகமாக உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

‘சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க்’ மற்றும் ‘சிட்பி’ இணைந்து வெளியிட்ட அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் எம்.எஸ்.எம்.இ துறைக்கு கடன் வழங்கும் சூழல் கணிசமாக மேம்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், இந்தத் துறைக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.47.80 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.90 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரூ.5 கோடி வரை கடன் பெற்ற நிறுவனங்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், மொத்த சிறுதொழில் கடன் நிலுவையில் சுமார் 80 சதவீதம் தனிநபர் வணிகர்களால் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government ready deal economic shock 2point50 lakh crore loan protection scheme Central Government considering


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->