அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..பெற்றோருக்கு அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


பள்ளிகள் திறக்க உள்ளநிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து 2022-ம் ஆண்டுக்கு  பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில்,  கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கர்நாடகாவில் நேற்று மாலை வரை 234 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் மற்ற இணை நோய்கள் இருந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்க உள்ளநிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் பள்ளி குழந்தைகளை மருத்துவரின் ஆலோசனையின்படி பொருத்தமான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும். உடல்நிலை சரியான பின்னர்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் பள்ளிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறியுடன் வந்தால், அவர்களுக்கு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள்,  அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If there are symptoms do not send children to school advice to parents


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->