வாட்ஸ் அப்பால் நடந்த விபரீதம்.. துடிதுடித்த மனைவி.. இறுதியில் நேர்ந்த துயரம்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஞ்சலி சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் போன் பேசி கொண்டிருந்தார்.

திடீரென அவரது கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து அஞ்சலி போனை கட்பண்ணியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கணவர், அவரது போனை வாங்கி பார்த்த போது கடைசியாக பேசிய எண்ணை பார்த்தபோது ஆண் பெயரில் இருந்துள்ளது.

கோபமடைந்த கணவர் வேறு ஆணுடன் எதற்காக பேசுகிறாய் என கேட்டு திட்டியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே இடையே சண்டை ஏற்பட்டது. கோவத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் அஞ்சலியின் வாயில் கொசு மருந்து எடுத்து ஊற்றி, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து அஞ்சலியின் கணவரை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

English Summary

husband killed wife


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal