FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி; நாளை கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
Holiday for schools and colleges in Kerala tomorrow due to FIFA World Cup final
உலகமே எதிர்பார்த்திருக்கும் FIFA கால்பந்து உலகக்கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பல பரீட்சை நடத்தவுள்ளன.
16 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள ஸ்பெயின் அணிக்கும், மெஸ்ஸியை கோப்பையுடன் ஓய்வுபெற அனுமதிக்கும் அர்ஜெண்டினா அணிக்குமான இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு சீசனை பொறுத்தவரையில் தங்களுடைய சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் ஸ்பெயின் அணி அரையிறுதியில் பலம்வாய்ந்த பிரான்ஸை தோற்கடித்தது. மறுபக்கம் ஆட்டத்தின் இறுதிநேரத்தில் வலுவான கம்பேக் கொடுக்கும் அர்ஜெண்டினா அணியில், மெஸ்ஸி அணிக்காகவும், மற்றவீரர்கள் மெஸ்ஸிக்காகவும் கூட்டாக இணைந்து விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதல் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இந்த உலாகி கோப்பை வெற்றியுடன் மெஸ்ஸி ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. முன்னதாக ரொனால்டோ, நெய்மர் போன்ற ஜாம்பவான்களின் அணி சூப்பர் 16 சுற்றுக்குள்ளேயே வெளியேறியுள்ளதால். ஒட்டுமொத்த
ரசிகர்களும் மெஸ்ஸியின் ஆட்டத்தைக்கான ஆவலாக உள்ளனர்.
இந்தியாவின் கேரளாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக கால்பந்து இருக்கும் சூழலில், மாணவர்கள் போட்டியை காணும்வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையை அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன். அறிவித்துள்ளார். இருப்பினும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
English Summary
Holiday for schools and colleges in Kerala tomorrow due to FIFA World Cup final