சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல - கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு.!
Having sex with a dead body is not a crime Karnataka High Court
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ரங்கராஜ் என்ற நபர் இளம் பெண் ஒருவரை கொலை செய்து அந்த உடலுடன் உடலுறவு கொண்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி என ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், சடலத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து ரங்கராஜ் தரப்பில் கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளியான ரங்கராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை சொல்லும் எனவும் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் குற்றவாளி சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். இது சட்டப்படி குற்றமாகும் அல்லது குற்றம் இல்லையா சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது. அதனால், இந்திய தண்டனை சட்டம் 375, 377 ஆகியவை குற்றமாக பொருந்தாது எனவே இறந்து போன ஒருவரின் உடலுடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Having sex with a dead body is not a crime Karnataka High Court