வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்...! எஸ்பிஐ ஊழியர்களின் வேலைநிறுத்தம் திடீர் ஒத்திவைப்பு...! - Seithipunal
Seithipunal


ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, வருகிற மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருந்தது.

ஏற்கனவே சனி, ஞாயிறு தொடர் விடுமுறையுடன் இணைந்து, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் நிலவியதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்தது.

இந்த நிலையில், வங்கி நிர்வாகத்துடன் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையில் சுமூக முன்னேற்றம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அனைத்து வங்கி கிளைகளும் வழக்கம்போல் செயல்படும். 52 கோடி வாடிக்கையாளர்களுக்கும் தடையற்ற சேவையை வழங்க உறுதியுடன் செயல்படுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Happy news bank customers SBI employees strike suddenly postponed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->