பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பிரபல சாமியார் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்துள்ள குஜராத் உயர் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசித்து வந்த பெண் ஒருவர், கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆன்மீக குரு ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் (54) மீது பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நாராயண் சாய் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றவெளியான நாராயண் சாய் தரப்பில், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் பல்வேறு சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் நாராயண் சாய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்கும் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களில் எவ்வித மெத்தனமும் காட்ட முடியாது என்றும், அவருக்கு எவ்வித சலுகையும் வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரது தண்டனையை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக நாராயண் சாய் தொடர்ந்து சிறையிலேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gujarat High Court dismisses bail plea of ​​the son of a prominent godman who was sentenced to life imprisonment in a rape case


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->