சமையலுக்கு தக்காளியை பயன்படுத்தக் கூடாது - ஆளுநர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்து சில மாதங்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் இந்த விலை உயர்வுக்கு நாட்டின் பல மாநிலங்களில் பெய்த மழை மற்றும் உற்பத்தி குறைவு உள்ளிட்டவை காரணமாக இருந்தாலும் சந்தைப்படுத்துதல் பதுக்கல் காரணமாக செயற்கையாகவே விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

 தக்காளியின் இந்த விலை ஏற்றத்தால் ஓட்டல்களில் தக்காளி சட்னிசட்னி சாதம் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தக்காளி விலை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதனால் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜ் பவனில் தக்காளி பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பஞ்சாப் மற்றும் சண்டிகரில் வசிப்பவர்கள் கடந்த சில வாரங்களாக தக்காளி விலையில் அசாதாரணமான உயர்வை

 உயர்வை எதிர்கொள்கின்றனர் இதனால் தக்காளி பயன்படுத்தும் குடும்பங்கள் கவலை அடைந்துள்ளன காய்கறி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் அவற்றை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதன் மூலம் அல்லது தவிர்ப்பதன் மூலம் அதன் தேவை இயல்பாகவே குறையும்.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில் தற்காலிகமாக தங்கள் வீடுகளில் மாற்று வழிகளை ஆராய மக்களை ஊக்குவிக்கிறேன் ராஜ் பவனில் தக்காளி பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தியுள்ளேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor banwari lal purohit ban use tomatto in punjab


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->